இடுகைகள்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...

  🌷 ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...💘 சிறுகதை பக்கத்து வீட்டு  மொட்டை மாடியில் ஏதோ நடக்கிறது! என்னவென்று தெரியவில்லை. இன்றைக்கு எப்படியும் கண்டுபித்தே ஆகவேண்டும். என்று மனதில் நினைத்துக் கொண்டான் , கணேசன். " ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனை மாதிரி மொட்டை மாடிக்கும்,  கீழுக்குமாக அலையறீங்க? ரெண்டு நாளாக என்ன வந்தது உங்களுக்கு? சாயந்தரம் ஆனா  மொட்டை மாடிக்கு போய்ட்டுப் போய்ட்டு வர்றீங்க?" சுசீலா, பொறுத்துப் பொறுத்து கேட்டே விட்டாள். " பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏதோ ' கசமுசா' நடக்குது, சுசிலா!" " கசமுசாவா? என்ன' கசமுசா'?" " தெரியலை. கண்டுபிடிக்கணும்." சுசீலாவின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தன. அடுத்த வீட்டு சங்கதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதிகாலத்து ஆர்வம்! " என்னதான் நடக்குது, மொட்டை மாடியில்?" பொறுமை இழந்து கேட்டாள். " யாரோ ஒரு ஆம்பளையும், பொம்பளையும் குசுகுசுன்னு பேசிக்கிற சத்தம்.. வளையல் சத்தம்.." " என்னங்க, நீங்க? சரியா பார்த்தீர்களா? பக்கத்து வீட்டுல யார் இருக்கிறது? முத்துசாமியும்,...

அறிவிப்பு

 அனைவருக்கும் வணக்கம்.  நான் இந்த வலைப்பகுதிக்கு புதிது. பத்திரிகளில் நிறைய கதைகள் எழுதி, பிரசுரமாகி, பரிசுகள் பெற்றிருந்தாலும் இது மாதிரி தளத்தில் இப்போதுதான் முதன்முதலாக எழுதுகிறேன்.  சிறுகதைகள், தொடர் கதைகள் என்று எழுத உள்ளேன். உங்கள் ஆதரவு, விமர்சனம், ஊக்கம் போன்ற போஷாக்கு தேவைப்படும் குழந்தை நான்.  முதன்முதலாக ஒரு நல்ல சிறுகதையுடன் என் பயணத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளேன்.  அடுத்து, ஒரு சிறுத்தையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  நன்றி. என்றும் அன்புடன்,  அபரஞ்சி