ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
🌷 ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...💘 சிறுகதை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏதோ நடக்கிறது! என்னவென்று தெரியவில்லை. இன்றைக்கு எப்படியும் கண்டுபித்தே ஆகவேண்டும். என்று மனதில் நினைத்துக் கொண்டான் , கணேசன். " ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனை மாதிரி மொட்டை மாடிக்கும், கீழுக்குமாக அலையறீங்க? ரெண்டு நாளாக என்ன வந்தது உங்களுக்கு? சாயந்தரம் ஆனா மொட்டை மாடிக்கு போய்ட்டுப் போய்ட்டு வர்றீங்க?" சுசீலா, பொறுத்துப் பொறுத்து கேட்டே விட்டாள். " பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏதோ ' கசமுசா' நடக்குது, சுசிலா!" " கசமுசாவா? என்ன' கசமுசா'?" " தெரியலை. கண்டுபிடிக்கணும்." சுசீலாவின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தன. அடுத்த வீட்டு சங்கதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதிகாலத்து ஆர்வம்! " என்னதான் நடக்குது, மொட்டை மாடியில்?" பொறுமை இழந்து கேட்டாள். " யாரோ ஒரு ஆம்பளையும், பொம்பளையும் குசுகுசுன்னு பேசிக்கிற சத்தம்.. வளையல் சத்தம்.." " என்னங்க, நீங்க? சரியா பார்த்தீர்களா? பக்கத்து வீட்டுல யார் இருக்கிறது? முத்துசாமியும்,...